×

ஆப்கானில் செயல்படும் என்ஜிஓக்களில் பெண்களுக்கு தடை: தலிபான்கள் உத்தரவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தலிபான் அரசு திடீர் தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு மீண்டும் பெண்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சமீபத்தில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க காலவரையின்றி தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தலிபான் அரசு நேற்று தடை விதித்தது. இதுதொடர்பாக பொருளாதார அமைச்சர் காரி தின் முகமது ஹனிப் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் ஹிஜாப், புர்கா உள்ளிட்ட உடை கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவதில்லை என நிறைய புகார்கள் வந்துள்ளன. எனவே, தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் ஆப்கானில் சம்மந்தப்பட்ட என்ஜிஓக்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’ என கூறப்பட்டுள்ளது. …

The post ஆப்கானில் செயல்படும் என்ஜிஓக்களில் பெண்களுக்கு தடை: தலிபான்கள் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Taliban ,Kabul ,Taliban government ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு